மேலும் செய்திகள்
ரயில்களில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
01-Oct-2026
அயோத்தியாப்பட்டணம்: காரிப்பட்டி போலீசார் நேற்று, அயோத்தியாப்பட்டணம், ராம் நகர் பாலம் அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்பிளண்டர் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தபோது, 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், சேலம், கருங்கல்பட்டியை சேர்ந்த இளையரசு, 28. அயோத்தியாப்பட்டணம், ராமர் கோவில் தெரு வெற்றிவேல், 28, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனர்.அதேபோல் தலைவாசல் அருகே தென்கரையை சேர்ந்த, 18 வயது சிறுவன், கடந்த ஆகஸ்டில் கஞ்சா விற்றதால், வீரகனுார் போலீசார் வழக்குப்பதிந்தனர். அவரை நேற்று, போலீசார் கைது செய்தனர்.9 கிலோ பறிமுதல்ரயில்வே தனிப்படை போலீசார், பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று சோதனை நடத்தினர். பொதுப்பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பையை எடுத்து பார்த்தபோது, 9 கிலோ கஞ்சா இருந்தததால் பறிமுதல் செய்தனர். அவர்கள், சேலம் ரயில்வே போலீசாரிடம் கஞ்சாவை ஒப்படைத்தனர்.
01-Oct-2026