உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வு பெற்ற ஊழியரை தாக்கிய மருமகள் உள்பட 2 பேர் மீது வழக்கு

ஓய்வு பெற்ற ஊழியரை தாக்கிய மருமகள் உள்பட 2 பேர் மீது வழக்கு

மேட்டூர், மேட்டூர், கருமலைக்கூடல், நேரு நகரை சேர்ந்தவர் கோவிந்தன், 74. மேச்சேரி டவுன் பஞ்சாயத்தில் உதவியாளராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். இவருக்கு ராமதாஸ், வெங்கடேஷ், 36, என, இரு மகன்கள் உள்ளனர். வெங்கடேஷ், குஞ்சாண்டியூரை சேர்ந்த, ராமசாமி மகள் அபிராமியை திருமணம் செய்துள்ளார். மது பழக்கத்தால், ஒரு மாதத்துக்கு முன், இடது கை, கால் செயலிழந்ததால், வெங்கடேஷ், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வில் உள்ளார்.கடந்த, 23 இரவு, 8:45 மணிக்கு கோவிந்தன், அவரது மகன், வீட்டில் இருந்தனர். அப்போது வெங்கடேஷின் மனைவி அபிராமி, அவரது தங்கை சுகந்தா வந்தனர். தொடர்ந்து, 'வெங்டேஷ் பெயரில் உள்ள சொத்துகளை என் பெயருக்கு மாற்றி எழுதி தர வேண்டும்' என, அபிராமி கேட்டார். அதற்கு கோவிந்தன், 'உடல்நிலை சரியில்லாத வெங்கடே ைஷ, தொந்தரவு செய்ய வேண்டாம்' என கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த சுகந்தா, செருப்பால், கோவிந்தன் கன்னத்தில் அடித்துள்ளார். அபிராமி கையால், வெங்கடேஷ் கன்னத்தில் அடித்தார். காயம் அடைந்த கோவிந்தன், வெங்கடேசன், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோவிந்தன் புகார்படி, அபிராமி, சுகந்தா மீது, கருமலைக்கூடல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ