பஸ் டிரைவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ஆத்துார் :பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 34. தனியார் பஸ் டிரைவரான இவர், கடந்த, 3ல், சேலத்தில் இருந்து ஆத்துார் நோக்கி பஸ்சை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். நரசிங்கபுரத்தில் சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், 30, மீது மோதுவது போன்று பஸ் வந்துள்ளது. இதுகுறித்து சக்திவேல், அவரது நண்பர்களிடம் தெரிவித்தார். ஆனால் பஸ் ஆத்துார் சென்றுவிட்டது. பின் நரசிங்கபுரம், அண்ணா தெருவை சேர்ந்த, அ.சதீஷ்குமார், 34, ராஜ்குமார், 39, ப.சதீஷ்குமார், 37, தங்கதுரை, 36, ஆகியோர், ஆத்துார் சென்று, டிரைவர் சக்திவேலை தாக்கினர். டிரைவர் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார், 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.