திருநங்கையர் மோதல் 8 பேர் மீது வழக்கு
சேலம்: சேலம், புது பஸ் ஸ்டாண்டில் திருநங்கையர் அட்டகாசத்தை தடுக்க, அவர்கள் பஸ் ஸ்டாண்-டுக்குள் யாசகம் எடுப்பதை தடுக்க, பள்ளப்பட்டி போலீசாரால் தடை திக்கப்பட்டுள்ளது. அதை மீறி நேற்று முன்தினம் இரவு, யாசகம் எடுப்பதில் அவர்களுக்குள் கோஷ்டி மோதல் உண்டாகி, ஒரு-வரையொருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர்.இதுதொடர்பாக மெய்யனுாரை சேர்ந்த திரு-நங்கை வேதஸ்ரீ, 22, புகார்படி, சூரமங்கலத்தை சேர்ந்த முத்தழகி, கவுசிகா, ஹனி, அன்னதானப்-பட்டி நிவ்யா மீதும், நிவ்யா, 19, புகார்படி, வேதஸ்ரீ, கிரேஸி, ரேணுகா, சஷ்தரிகா மீதும் வழக்குப்ப-திந்து, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.