உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

சேலம்: மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் கோட்டை மைதானத்தில் மாவட்ட செயலர் வெங்கடாஜலம் தலைமையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில் தடையை மீறி, அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.இந்நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலர் வெங்கடாஜலம் உள்பட, 401 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். * ஓமலுாரில் அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்டம் சார்பில், அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் செம்மலை, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, மாநிலங்களவை எம்.பி.,சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் ஏற்காடு சித்ரா, வீரபாண்டி ராஜமுத்து, சங்ககிரி சுந்தரராஜன், ஆத்துார் ஜெயசங்கர், கெங்கவல்லி நல்லதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ.,வெற்றிவேல் உட்பட, 563 பேர் மீது ஓமலுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ