மேலும் செய்திகள்
வாகனம் மோதி காவலாளி பலி
08-May-2025
சங்ககிரி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், எலந்தகுட்டை அருகே ரங்கனுாரை சேர்ந்தவர் பாலமுருகன், 32. சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கோழிக்கறிக்கடை நடத்துகிறார். இவரிடம், சங்ககிரி, கொங்கணாபுரம் பிரிவு அருகே ஓட்டல் நடத்தும் மல்லாகவுண்டர், தினமும் கறி வாங்கி செல்வார். கடந்த, 24ல், 9 கிலோ கறியை கடனாக வாங்கினார். அத்தொகையை, ஓட்டலுக்கு சென்று, பாலமுருகன் கேட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில், மல்லாகவுண்டர், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் என, 4 பேர், பாலமுருகனை தாக்கினர். காயம் அடைந்த அவர், சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, மல்லாகவுண்டர் உள்பட, 4 பேர் மீது சங்ககிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
08-May-2025