மேலும் செய்திகள்
மனைவியை தாக்கிய கணவர் உட்பட நால்வர் மீது வழக்கு
10-Apr-2025
ஆத்துார்: கெங்கவல்லி, வாழக்கோம்பை, புலிகரட்டை சேர்ந்தவர் செந்-தில்ராஜா, 39. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா, 38. இரு குழந்தைகள் உள்ளனர். செந்தில்ராஜா, போதையில் அடிக்கடி தகராறு செய்து வந்தார். 'சில நாட்களுக்கு முன், கணவர் அடித்ததில், உலிபுரத்தில் உள்ள, கணவரது தங்கை வீட்டுக்கு சகுந்தலா சென்றார். இதைய-றிந்த செந்தில்ராஜா, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து தோசை கரண்டியால் மனைவியை தாக்கியுள்ளார். இதில், அவரது மண்டை உடைந்து கெங்கவல்லி அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார், செந்தில்ராஜா மீது வழக்குப்பதிந்து, அவரை தேடுகின்றனர்.
10-Apr-2025