உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தந்தை சொத்தை அபகரித்து விற்பனை ஏட்டு மீது 3 பிரிவில் வழக்குப்பதிவு

தந்தை சொத்தை அபகரித்து விற்பனை ஏட்டு மீது 3 பிரிவில் வழக்குப்பதிவு

ஆத்துார், ஆத்துார், அப்பமசமுத்திரத்தை சேர்ந்தவர் அசோகன், 53. சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துமவனை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக உள்ளார். அவரது தந்தை ஆறுமுகம் பெயரில், அப்பமசமுத்திரத்தில், 22.5 சென்ட் விவசாய நிலம் இருந்தது. அந்த நிலத்துக்கு, போலி பத்திரம் தயாரித்து, அசோகன், அவரது பெயருக்கு தானசெட்டில்மென்ட் செய்து கொண்டார்.தொடர்ந்து அந்த நிலத்தை, திருச்செங்கோட்டை சேர்ந்த சின்னசாமிக்கு, 80 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். அதே நிலத்தை, நரசிங்கபுரத்தை சேர்ந்த ஆசிரியர் முருகன், 56, என்பவருக்கு மீண்டும் விற்று, முன்பணம், 43 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார்.இந்நிலையில் நிலத்தை கையகப்படுத்த சின்னசாமி முயன்றபோது, ஆறுமுகம் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது போலி ஆவணம் மூலம் நிலம் கைமாறியது தெரிந்தது. இதையடுத்து ஆசிரியரும், 43 லட்சம் ரூபாயை திரும்ப கேட்டார். பணம் தர மறுத்து, அசோகன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.ஆசிரியர் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்ததில், அந்த நிலம், சின்னசாமியிடமிருந்து, அதே ஊரை சேர்ந்த ராஜசேகர், அடுத்து ரவி என்பவருக்கு, 2 கோடி ரூபாய்க்கு விற்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மோசடி, நம்பிக்கை துரோகம், போலி ஆவணம் தயாரித்தல் பிரிவுகளில், அசோகன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை