மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 17 முதல் தொடக்கம்
சேலம்: சேலம் மாநகரில், 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்-கான முதல்கட்ட பணி தொடங்கப்பட்டு, வீடுகளின் தன்மை, அதன் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மக்கள் தானாக முன்வந்து, வீடுகளின் தன்மை தொடர்பான சுய விபரங்களை, www.se.census.gov.inஎன்ற இணையதளம் மூலம், வரும், 17 முதல், 31 வரை பதிவு செய்யலாம். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் மூலம், வீட்டின் தன்மை கணக்கெடுக்கும் பணி, ஆக., 1 முதல், 30 வரை நடத்-தப்பட உள்ளது. இத்தகைய தேசிய பணியில் அனைவரும் தவ-றாமல் பங்கேற்று சுய விபரங்களை பதிவிட வேண்டும். கணக்கெ-டுப்பு நம் வளர்ச்சிக்கானது. அதனால் தவறாமல் பங்கேற்க உறுதி ஏற்போம் என, சேலம் மாநகராட்சி கமிஷனர் லலித் ஆதித்ய நீலம் தெரிவித்துள்ளார்.