உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மத்திய, மாநில அரசுகள் மக்களை ஏமாற்ற கூட்டணி

மத்திய, மாநில அரசுகள் மக்களை ஏமாற்ற கூட்டணி

தமிழகத்தில் விக்கிரவாண்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளின் கட்டணம், செப்டம்பர் 1 முதல் 7 சதவீதம் வரை, அதாவது 5 முதல் 150 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டணத்தில் 40 சதவீதத்தை சாலைகள் பராமரிப்புக்கு செலவிட வேண்டும். பெரும்பாலான சாலைகள் பராமரிக்கப்படுவதே இல்லை. சாலைகளை பராமரிக்காத நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு, சுங்க கட்டணத்தை உயர்த்த தார்மீக உரிமை இல்லை. விதிகளின்படி தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும்; ஆனால், 67 உள்ளன. 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசுடன் பேச்சு நடத்தி, 32 சாவடிகள் மூடப்படும் என, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இதுவரை ஒரு சுங்கச்சாவடி கூட மூடப்படவில்லை.இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்து, மக்களை ஏமாற்றுகின்றன. சுங்க கட்டண உயர்வால் சரக்கு லாரிகளின் வாடகை உயர்ந்து விலைவாசி அதிகரிக்கும். தனியார் பஸ் கட்டணமும் உயரும்.- அன்புமணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ