ஓடும் பஸ்சில் சங்கிலி மாயம்
மேட்டூர், ஈரோடு, வாசவி கல்லுாரி அருகே, காமதேனு நகரை சேர்ந்தவர் ஆரோக்யமேரி, 54. வீட்டு வேலை செய்கிறார். இவரது கணவர் இறந்து விட்டார். இரு மகன்கள் உள்ளனர்.கடந்த, 15ல் மேட்டூர் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்துக்கு சென்ற ஆரோக்யமேரி, பின் மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் சென்றார்.அங்கு காலை, 11:30 மணிக்கு ஈரோடு பஸ்சில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார். செக்கானுார் அருகே சென்றபோது, அவர் அணிந்திருந்த, 1 பவுன் சங்கிலியை காணவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் ஆரோக்யமேரி புகார்படி, மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.