ரயில் இயக்கத்தில் மாற்றம்
சேலம்: பராமரிப்பு பணியால் ஈரோடு, கரூர் வழி ரயில் இயக்கத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: ஈரோடு அருகே சாவடிபாளையத்தில், அக்., 5, 6ல் பராமரிப்பு பணி நடக்க உள்ளது. இதனால் அந்த நாட்களில், திருச்சி - ஈரோடு ரயில், செங்கோட்டை - ஈரோடு ரயில் ஆகியவை கரூர் வரை மட்டும் இயக்கப்படும். ஈரோடு - செங்கோட்டை ரயில், கரூரில் இருந்து இயக்கப்படும். ஈரோடு - கரூர் இடையே முன்பதிவற்ற ரயில் ரத்து செய்யப்படுகிறது.