நாமக்கல் - சேலம் தடத்தில் போக்குவரத்தில் மாற்றம்
நாமக்கல் - சேலம் தடத்தில் போக்குவரத்தில் மாற்றம்பனமரத்துப்பட்டி, டிச. 29-சேலம் - நாமக்கல் நான்கு வழிச்சாலையில், மல்லுார் பிரிவில் பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது. இதற்கு சேலத்தில் இருந்து நாமக்கல் செல்லும் பிரதான சாலை மூடப்பட்டு, சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. நாமக்கல்லில் இருந்து சேலம் வரும் வாகனங்கள், பிரதான சாலையில் இயக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மதியம் முதல், நாமக்கல் - சேலம் பிரதான சாலை மூடப்பட்டது. நாமக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள், தனியார் பள்ளி அருகே, நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து மல்லுார் ஊருக்குள் சென்று மீண்டும் நெடுஞ்சாலையில் இணைந்து சேலம் செல்கின்றன. சேலத்தில் இருந்து நாமக்கல், ராசிபுரம் செல்லும் பஸ்கள், மல்லுார் வழியே இயக்கப்படுகின்றன.