உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேதியியல் துறை மன்றம் தொடக்கம்

வேதியியல் துறை மன்றம் தொடக்கம்

சேலம், சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில், வேதியியல் துறை சார்பில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மன்ற தொடக்க விழா, நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் கலைச்செல்வி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.அதில், 'இன்பிசோம்' டெக்னாலஜிஸ் தலைவர் சுப்பிரமணியம் பேசுகையில், ''மன்றங்களில் இணைந்து சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல், சேவை ஆகியவற்றில் ஈடுபட்டு, தங்களையும், சமுதாயத்தையும் முன்னேற்றி வழிநடத்தும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து முதல்வர் கலைச்செல்வி, மன்ற விதிகளை வாசிக்க, மாணவ உறுப்பினர்கள், கையில் விளக்குகளை ஏந்தி, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரேமலதா, வேதியியல் துறை தலைவர் பாதுஷா, உள்ளக உறுதியீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி