மேலும் செய்திகள்
ச.ஆ.பெரமனுாரில் சாலை பணி தொடக்கம்
24-Jul-2025
பனமரத்துப்பட்டி: பெரமனுார் பச்சையம்மன் கோவில் அக்னி திருவிழா கடந்த, 6ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதை ஒட்டி நேற்று முன்தினம், காவல் தெய்வமான செம்மலையப்பர் சுவாமி, தண்டல் வசூலுக்கு புறப்பட்டது. பூசாரிகள், தோளில் சுவாமியை சுமந்தபடி, பெரமனுார், களரம்பட்டி, பள்ளிதெருப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீடுதோறும் சென்றனர். நேற்று நத்தமேடு, காந்தி நகர், கோம்பைக்காடு, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுதோறும் சென்றனர். பக்தர்கள், சுவாமியை வரவேற்று, காணிக்கை செலுத்தி வழிபட்டனர். வரும், 13ல் கோவில் முன் அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
24-Jul-2025