உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் வரும் முதல்வர்: ட்ரோன் பறக்க தடை

சேலம் வரும் முதல்வர்: ட்ரோன் பறக்க தடை

ஓமலுார், இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் முதல்வர் ஸ்டாலின், மாலை, 5:45 மணிக்கு சேலம் வருகிறார். தொடர்ந்து சேலம், நேரு கலையரங்கில் நடந்து வரும், இ.கம்யூ., மாநில மாநாட்டில் பங்கேற்கிறார். பின் கார் மூலம் தர்மபுரி சென்று, மக்கள் மத்தியில், 'ரோடு ேஷா' நடத்துகிறார். அங்குள்ள பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை, தர்மபுரியில் நடக்கும் அரசு விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மதியம், 12:00 மணிக்கு, மீண்டும் சேலம் வந்து, அதே விமானத்தில் சென்னை புறப்பட உள்ளார். இதனால் முதல்வர் செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதையொட்டி இன்று, நாளை, சேலம் மாவட்டத்தில், 'ட்ரோன்'கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !