உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதல்வர் கோப்பை கால்பந்து: பள்ளப்பட்டி பள்ளி சாதனை

முதல்வர் கோப்பை கால்பந்து: பள்ளப்பட்டி பள்ளி சாதனை

அரவக்குறிச்சி, முதல்வர் கோப்பை கால்பந்து போட்டியில், மாவட்ட அளவில் முதல், இரண்டாமிடம் பெற்றுபள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இறுதி போட்டியில் மாவட்ட அளவில் 20 அணிகள் கலந்து கொண்டன. இதில் பள்ளபட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், இரு அணிகளாக கலந்து கொண்டனர். 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி அணி முதல் போட்டியில், உடையாப்பட்டி மாரிஸ்ட் பள்ளி அணியுடன் மோதி 2--0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். கால் இறுதி போட்டியில் அய்யர்மலை மவுண்ட் கிரீஸ் பள்ளி அணியை வென்றனர். அரையிறுதி போட்டி யில் புகழூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியை, 5--4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றனர்.இதேபோல், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர். மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பெற்றனர்.வெற்றி பெற்றவர்களை பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி கஜனபர் அலி, தலைமை ஆசிரியர் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியர்கள் தாஜுதீன், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ