உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சரக்கு வாகனம் டயரில் சிக்கி குழந்தை பலி

சரக்கு வாகனம் டயரில் சிக்கி குழந்தை பலி

பெத்தநாயக்கன்பாளையம் :பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த, வடுகத்தம்பட்டி ஏழு தண்டியார் கோவில் பகுதியை சேர்ந்தவர் விவசாயி வேல்மணி, 30. இவரது இரண்டரை வயது குழந்தை வெற்றி வாசன். நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு வீட்டுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன், 27, என்பவர், அவரது மகேந்திரா பொலிரோ 'சரக்கு வாகனத்தை இயக்க முயன்ற போது, வாகனத்தின் பின் சக்கரத்தில் வெற்றிவாசன் சிக்கி படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தான்.குழந்தையின் உடலை ஏத்தாப்பூர் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மணிகண்டனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !