உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜி.ஹெச்., டாக்டர்கள் அலட்சியத்தால் குழந்தை பலியானதாக புகார்

ஜி.ஹெச்., டாக்டர்கள் அலட்சியத்தால் குழந்தை பலியானதாக புகார்

வேலுார்: வேலுார் அருகே, அரசு மருத்துவமனை டாக்டர்களின் அலட்சி-யத்தால், 6 மாத குழந்தை பலியானது என, பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் படி, அணைக்கட்டு வட்டார மருத்துவ அலு-வலர் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த தாமரைபுரத்தை சேர்ந்தவர் கார்த்தி, 35, விவசாயி. இவர் மனைவி ஜெயந்தி, 32. இவர்க-ளுக்கு அஜித், 6, ரோகித், 3, என இரு மகன்கள் உள்ள நிலையில், கடந்த, 6 மாதத்திற்கு முன் ஜெயந்திக்கு, மாதேஷ், மனோஜ் என இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இதில், மனோஜ்ஜிற்கு வயிற்றுபோக்கு, காய்ச்சல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு அழைத்து சென்றபோது, அங்கு குழந்தைக்கு நீர்சத்து மிகவும் குறைவாக உள்ளது என தெரிவித்ததால், உடனடியாக குடி-யாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், குழந்தை உயிரிழந்தது. குழந்தை இறப்புக்கு, அரசு டாக்டர்களின் காலதா-மதமான சிகிச்சை தான் காரணம் என பெற்றோரும், உறவினர்-களும் குற்றம் சாட்டி, உரிய சிகிச்சை அளிக்காத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.அங்கு சென்ற அணைக்கட்டு வட்டார மருத்துவ அலுவலர் சிங்காரவேலன், குடியாத்தம் போலீஸ் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !