உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழந்தைகள் பாதுகாப்பு வினாடி - வினா போட்டி

குழந்தைகள் பாதுகாப்பு வினாடி - வினா போட்டி

சேலம்: தமிழக அரசு பள்ளிகளில் கடந்த நவ., 14ல், மாணவர்கள் மூலம், 'மகிழ்முற்றம்' எனும் குழு அமைக்கப்பட்டது. இதன்மூலம் குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. தற்போது பள்ளிகளில் பாலியல் தொல்லை குறித்த புகார்கள் அதிகரித்த நிலையில், அனைத்து அரசு பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, வினாடி - வினா போட்டியை, மகிழ்முற்றம் மூலம் நடத்த உத்தரவிடப்பட்டது.அதன்படி நேற்று, அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் போட்டி நடந்தது. 6 முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், ஒவ்வொரு பள்ளியிலும், 20 பேர், போட்டியில் நேரடியாக பங்கேற்றனர். மற்ற மாணவ, மாணவியரும், பார்வையாளர்களாக பங்கேற்றனர். பள்ளி அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற, குழுவினர் பெயர் பட்டியலை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ