உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொடர் மழையால் நிரம்பும் சின்னேரி

தொடர் மழையால் நிரம்பும் சின்னேரி

ஓமலுார், சேலம் மாவட்டம் ஓமலுார், காமலாபுரத்ததில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி, சின்னேரி உள்ளன. சக்கரைசெட்டிப்பட்டி அருகே, ஏற்காடு அடிவரப்பகுதியான குறுமிச்சங்கரட்டில், கிழக்கு சரபங்கா ஆறு உருவாகிறது. மழையால் சரபங்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒரு மாதத்துக்கு முன் பெரிய ஏரி நிரம்பியது. அதில் கோடி விழுந்த நீர், சின்னேரிக்கு வந்து கொண்டிருக்கிறது. 80.94 ஹெக்டேர் பாசன பரப்பு கொண்ட, அந்த ஏரிக்கரை, 1,235 மீட்டர். சில நாட்களாக தொடர் மழையால், ஓரிரு நாட்களில் சின்னேரி நிரம்பும் நிலை உள்ளது. இந்நிலையில் கிராம மக்கள், ஏரியில் அதிகளவில் வரும் தண்ணீரை பார்த்துச்செல்கின்றனர். -----------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !