உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2வது மாடியில் இருந்து விழுந்த குடிமகன் பலி

2வது மாடியில் இருந்து விழுந்த குடிமகன் பலி

சேலம், சேலம், அரிசிபாளையம், சின்னப்பன் தெருவை சேர்நதவர் சரவணன், 32. இவர், நேற்று முன்தினம் ரத்தினசாமிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வசிக்கும் அக்கா செல்வியை பார்க்க, மாடியில் ஏறியுள்ளார். அப்போது, 'போதை'யில் இருந்த அவர், 2வது மாடி கைப்பிடி சுவரில் அமர்ந்திருந்தபோது, தவறி விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அங்கு நேற்று உயிரிழந்தார். செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி