உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகர செயலர் பிறந்தநாள் பேனர்கள் அகற்றம்

நகர செயலர் பிறந்தநாள் பேனர்கள் அகற்றம்

ஆத்துார்: ஆத்துார் அ.தி.மு.க., நகர செயலர் மோகன், 63. இவரது பிறந்த நாளையொட்டி, அவரது ஆதரவாளர்கள், ஆத்துார், பழைய பஸ் ஸ்டாண்ட், ராணிப்பேட்டை, காமராஜர் சாலை, உடையார்பா-ளையம் உள்பட, 8 இடங்களில், நேற்று முன்தினம் பேனர்கள் வைக்கப்பட்டன.அதில் மோகன் படம் பெரிதாகவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்., சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் ஆகியோரது படங்கள் சிறிதாகவும் இருந்தன. இதுகுறித்து அக்கட்சியினர், கட்சி தலைமைக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று, அனைத்து பேனர்களும் நேற்று அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ