/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ்சில் பெண் தவறவிட்ட 6 பவுன் சங்கிலி போலீசில் ஒப்படைத்த துாய்மை பணியாளர்
பஸ்சில் பெண் தவறவிட்ட 6 பவுன் சங்கிலி போலீசில் ஒப்படைத்த துாய்மை பணியாளர்
இடைப்பாடி: ஓமலுார், காமலாபுரம் அருகே தாத்தையாங்கார்பட்டியை சேர்ந்த, பழனிசாமி மனைவி சுகன்யா, 33. நேற்று உறவினர் திரு-மணத்துக்கு, ஓமலுாரில் இருந்து இடைப்பாடிக்கு தனியார் பஸ்சில் சென்றார். அப்போது அவரது, 6 பவுன் தங்க ஆரத்தை தவறவிட்டார். இந்நிலையில், அரசு போக்குவரத்து இடைப்பாடி கிளையில் துாய்மை பணியாளராக உள்ள சேகர் மனைவி நஞ்சுண்டேஸ்வரி, 54, என்பவர், திருமண நிகழ்ச்சிக்கு நேற்று இடைப்பாடியில் இருந்து ஈரோடு செல்ல, பஸ்சில் ஏறினார். அப்போது தங்க சங்கி-லியை பார்த்து எடுத்த அவர், இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷன் சென்று, இன்ஸ்பெக்டர் பேபி, எஸ்.ஐ., சீதாவிடம் ஒப்ப-டைத்தார். விசாரித்த போலீசார், பின் சுகன்யாவை வரவழைத்து ஒப்படைத்தனர். மேலும் துாய்மை பணியாளரை, போலீசார் பாராட்டினர்.