உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துாய்மை இந்தியா கணக்கெடுப்பு பயிற்சி

துாய்மை இந்தியா கணக்கெடுப்பு பயிற்சி

சேலம்: துாய்மை கணக்கெடுப்பில் மேற்கொள்ள வேண்டிய பணி, அதற்கான ஆவணங்களை தயார் செய்வது குறித்து, மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு, ஒருநாள் பயிற்சி நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி நேற்று, சேலம், கோட்டை பல்நோக்கு அரங்கத்தில் ஒருநாள் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.இதில் சேலம், ஓசூர் மாநகராட்சிகள், சேலம் மண்டலத்துக்குட்பட்ட நகராட்சிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி டவுன் பஞ்சாயத்துகளை சேர்ந்த துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் பயிற்சி பெற்றனர். நகராட்சி நிர்வாக இயக்குனரக அலுவலகத்தில் இருந்து வந்த கவுதம், கிேஷார், பயிற்சியை வழங்கினர். துணை கமிஷனர் பாலசுப்பிரமணியம், மாநகர் நல அலுவலர் முரளிசங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ