உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் ஜமாபந்தி துவக்கம்

சேலத்தில் ஜமாபந்தி துவக்கம்

சேலம், சேலத்தில் நேற்று நடந்த ஜமாபந்தியில், கலெக்டர் பிருந்தாதேவி, மனுக்களை பெற்றுக்கொண்டார்.சேலம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடந்தது. இதில், கலெக்டர் பிருந்தாதேவி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.பின்னர் கலெக்டர் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களில், ஜூன் 18 முதல், 26 வரை, ஜமாபந்தியில், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று, ரேஷன் அட்டை, வகுப்பு சான்று, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிட சான்று, பசுமை வீடு, சிறு, குறு விவசாய சான்று உள்ளிட்ட மனுக்களை விண்ணப்பித்து பயன்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடக்கும் அனைத்து ஜமாபந்தியிலும், பெறப்படும் மனுக்கள் மீது, தனி கவனம் செலுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.உதவி கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, வேளாண் துணை இயக்குனர் சிங்காரம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.* ஓமலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், மேட்டூர் சப்-கலெக்டர் பொன்மணி ஜமாபந்தி அலுவலராக பங்கேற்றார். பின் மக்களிடம் இலவச வீட்டுமனை பட்டா, பெயர் திருத்தம், நிதி உதவி உள்ளிட்ட, 186 விண்ணப்பங்களை பொன்மணி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, வி.ஏ.ஓ.,க்கள் பராமரிப்பு செய்து வரும் ஆவணங்களை ஆய்வு செய்தார். தாசில்தார் ரவிக்குமார், மண்டல தாசில்தார் பன்னீர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.* வாழப்பாடி தாலுகா அலுவலகத்தில், பேளூர் குறுவட்டத்தில் உள்ள, 17 ஊராட்சிகளுக்கு, ஜமாபந்தி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகாவிடம், 266 கோரிக்கை மனுக்களை பொது மக்கள் வழங்கினர். வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.* கொளத்துார் உள்வட்டத்தில் நேற்று நடந்த ஜமாபந்திக்கு, உதவி ஆணையர் (கலால்) மாறன் தலைமை வகித்தார். காவேரிபுரம், கருங்கல்லுார், லக்கம்பட்டி, சிங்கிரிப்பட்டி, தின்னப்பட்டி உள்ளிட்ட மக்களிடம், 162 மனுக்கள் பெறப்பட்டது. தாசில்தார்கள் விஜி, புரு ேஷாத்தமன், சுமதி முன்னிலை வகித்தனர்.* காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், சேலம் முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர் ரவிச்சந்திரன், பொதுமக்களிடம் இருந்து, 192 மனுக்களை பெற்றுக் கொண்டார். காடையாம்பட்டி தாசில்தார் ஹசின்பானு உடனிருந்தார்.* இடைப்படி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், பொதுமக்களிடம் இருந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அலுவலர் முருகன், 155 மனுக்களை பெற்றார்.* சங்ககிரி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., லோகநாயகி, மக்களிடம் இருந்து, 178 மனுக்களை பெற்றார். தாசில்தார் அறிவுடைநம்பி, சமூக பாதுகாப்பு நலத்துறை தனி தாசில்தார் ஜெயக்குமார், துணை தாசில்தார் தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ