உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கைதிகளுக்கு போட்டி

கைதிகளுக்கு போட்டி

சேலம், சேலம் மத்திய சிறையில், கைதிகளுக்கு விளையாட்டு போட்டி நேற்று நடந்தது. வாலிபால், கேரம், சதுரங்கம், பூப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. 400 கைதிகள் விளையாடினர். தொடர்ந்து, 'ஜெயில் சிங்கர் - 2026' போட்டியில் கார்த்திக், சிறந்த டான்ஸராக பெருமாள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு, எஸ்.பி., வினோத் பரிசு வழங்கினார். சிறை அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும், 1,300க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு காலையில் இட்லி, கிச்சடி, தேங்காய் சட்னி, மசால், போண்டா, லட்டு, மதியம் வெஜிடபுள் பிரியாணி, ஆனியன் பச்சடி, பாயாசம், வாழைப்பழம் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி