உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரியில் இறைச்சி கழிவு கலெக்டரிடம் புகார்

ஏரியில் இறைச்சி கழிவு கலெக்டரிடம் புகார்

தாரமங்கலம்: 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், தாரமங்கலம் நகராட்-சியில் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார். பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தபோது அங்குள்ள கோவில் தெப்பக்குளத்தை பராமரிக்க அறிவுறுத்தினார். அதேபோல் பஸ் ஸ்டாண்ட், கடை வியாபாரிகள், பயணியர் நிற்கும் இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க, நகராட்சி கமிஷனரிடம் கூறினார்.தொடர்ந்து வாரச்சந்தை, ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள நடுநி-லைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டார். அப்-போது அங்கிருந்த மக்கள், பவளத்தானுார் ஏரியில் சிலர் மாமிச கழிவை கொட்டுவதால் தண்ணீர் மாசடைகிறது. அந்த வழியே நடைபயிற்சி செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது என, மக்கள் புகார் தெரிவித்தனர். அதேபோல், பட்டா கேட்டு மனு அளித்து, 6 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை என தெரிவித்தார். இதற்கு நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ