உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லாரி மோதி கம்ப்ரசர் டிரைவர் பலி

லாரி மோதி கம்ப்ரசர் டிரைவர் பலி

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி, சங்கரன் வட்டத்தை சேர்ந்-தவர் தமிழ்மணி, 32. பெங்களூருவில் கம்ப்ரசர் வாகன டிரைவ-ராக பணிபுரிந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். மகனின் பிறந்தநாளுக்கு தமிழ்மணி, அவரது தம்பி பொன்னுமணி, 24, என்பவ-ருடன், பெங்களூருவில் இருந்து, 'சைன்' பைக்கில் சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் வந்தனர்.மாலை, 6:00 மணிக்கு, ஓமலுார் சாலையில், மூலக்கடை பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, லாரி, பைக் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்த தமிழ்மணி மீது, லாரியின் பின்புற சக்கரம் ஏறி-யது. பொன்னுமணிக்கு கைவிரல்களில் காயம் ஏற்பட்டது. இருவ-ரையும் மக்கள் மீட்டு ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்-பினர். ஆனால் வழியில் தமிழ்மணி உயிரிழந்தார். பொன்னுமணி புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை