சிலையை சீரமைக்காமல் ராஜிவ் பிறந்தநாள் கொண்டாடிய காங்.,
சேலம், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன் உள்ள, முன்னாள் பிரதமர் ராஜிவ் சிலை முறையாக பராமரிக்கப்படாததால், அதன் கைகள், பாதம், பீடத்தில் விரிசல் விழுந்துள்ளது. ஆனால் அதை சரிசெய்யாமல் நேற்று, அவரது, 81வது பிறந்தநாளையொட்டி, காங்., கட்சியின், சேலம் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் பலரும், மாலை அணிவித்து, அதற்கு முன் நின்று மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்தனர். காங்., கட்சி அலுவலகம் அருகே உள்ள ராஜிவ் சிலையை கூட பராமரிக்காமல், பிறந்தநாள் கொண்டாடியதாக, மக்கள் விமர்சித்தனர்.