உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இ.பி.எஸ்.,சை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

இ.பி.எஸ்.,சை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

சேலம், காங்., தலைவர் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்ததாக, அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்.,சை கண்டித்து, அவரது உருவப்படத்தை கிழித்து, சேலம் மாநகர் மாவட்ட காங்., கட்சியினர், சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். இதில் மாநகர பொருளாளர் ராஜகணபதி, பொதுச்செயலர் சிவக்குமார், துணைத்தலைவர் திருமுருகன், வர்த்தக பிரிவு தலைவர் சுப்ரமணியம், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அஹமது உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதேபோல் சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுகுறித்து அர்த்தனாரி கூறுகையில், ''காங்., தலைவரை, இ.பி.எஸ்., அவதுாறாக பேசியுள்ளார். ஒட்டு போட்ட சட்டை என, காங்., கட்சியினரை விமர்சித்துள்ளார். இ.பி.எஸ்., பேச்சுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை