உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் கருவறைக்கு வாசல் கதவு அமைக்கும் பணி

செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் கருவறைக்கு வாசல் கதவு அமைக்கும் பணி

சேலம், மாரியம்மன் கோவில் கருவறைக்கு, வாசல்கால் வைக்கும் பணி சிறப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது.சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் முடிந்து, 12 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், மீண்டும் கும்பாபிேஷகம் செய்ய, ஆறு மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்து திருப்பணிகள் துவங்கப்பட்டது. 2 கோடி ரூபாய் மதிப்பில் உபயதாரர்கள் பங்களிப்புடன் நடந்து வரும் திருப்பணிகளின் ஒரு பகுதியாக, கருங்கல்லால் செய்யப்பட்ட கருவறை வாசல் கதவு வைக்கும் நிகழ்ச்சி நேற்று சிறப்பு பூஜைகளுடன் நடந்தது.கும்பாபிேஷக திருப்பணிக்காக, கோவில் முழுவதுமாக இடித்து தரை மட்டம் செய்து, தரைத்தளத்தை 5 அடி வரை உயர்த்தி முழுக்க முழுக்க கருங்கற்களால், 33 அடி உயர கருவறை கோபுரம் மற்றும் எட்டே முக்கால் அடி உயரம், ஆறு அடி அகலத்தில் கருங்கல்லால் செய்யப்பட்ட வாசல் நிலைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அடுத்தாண்டு தை மாதத்துக்குள் பணிகள் முடித்து கும்பாபிேஷகம் செய்யும் வகையில், இலக்கு நிர்ணயித்து திருப்பணிகள் நடந்து வருவதாக அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். நிகழ்ச்சி யில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் கலைச்செல்வி, உபயதாரர்கள், கட்டளை உற்சவதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை