உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் கட்டட தொழிலாளி பலி

விபத்தில் கட்டட தொழிலாளி பலி

விபத்தில் கட்டட தொழிலாளி பலிஏற்காடு, டிச. 22-ஏற்காடு, அசம்பூரை சேர்ந்த, கட்டட தொழிலாளி மணிகண்டன், 30. இவருக்கு மனைவி, 20 நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தை உள்ளனர்.நேற்று முன்தினம் ஹீரோ ஹோண்டா பைக்கில் ஏற்காடு வந்து விட்டு, மாலை, 5:30க்கு வீட்டுக்கு புறப்பட்டார். கொம்மகாட்டை கடந்து அசம்பூர் அருகே சென்றபோது, சாலையோர திட்டில் பைக் மோதியது.இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன், ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர், நேற்று காலை உயிரிழந்தார். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை