உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆசிரியர்கள் வாகனத்தை சுத்தப்படுத்திய மாணவர்கள் வீடியோ பரவியதால் சர்ச்சை

ஆசிரியர்கள் வாகனத்தை சுத்தப்படுத்திய மாணவர்கள் வீடியோ பரவியதால் சர்ச்சை

வாழப்பாடி:சேலம் மாவட்டம், வாழப்பாடி, மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 27 முதல் நேற்று வரை, நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது. அப்பள்ளி மாணவர், 38 பேர் பங்கேற்றனர். மாதேஸ்வரன், ஜெயக்குமார், பொறுப்பு ஆசிரியர்களாக இருந்தனர். ஆயுத பூஜையன்று, ஆசிரியர்களின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை, முகாமில் பங்கேற்ற மாணவர்களை சுத்தப்படுத்த வைத்துள்ளனர். இந்த வீடியோ பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தலைமை ஆசிரியர் ஸ்ரீராம் கூறியதாவது: வெளி ஆட்கள் இருவர் அப்பள்ளிக்கு தண்ணீர் பிடிக்க சென்றனர். அப்போது, ஆசிரியர்கள், 'எங்களுக்கே போதிய தண்ணீர் இல்லை' என, தெரிவித்து, அவர்களை தண்ணீர் பிடிக்க மறுத்துவிட்டனர். அப்போது மாணவர்கள் வாகனத்தை சுத்தம் செய்ததை பார்த்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். மாணவர்கள், சொந்த விருப்பத்தில் சுத்தம் செய்திருக்கலாம். இருப்பினும், ஆசிரியர்கள் சுத்தம் செய்ய அறிவுறுத்தினரா என விசாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை