பள்ளி சுதந்திர தின விழாவில் ஒருவரின் படத்தால் சர்ச்சை
அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம், சின்னனுார் அரசு நடுநிலைப்பள்-ளியில், கடந்த, 15ல் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதில் கொடிக்கம்பம் அருகே காந்தி, காமராஜர் படங்களுடன், மற்றொருவர் படமும் வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அந்த படத்தை வைத்து, மரியாதை செலுத்திய காட்சி, சமூக வலைதளங்களில் தற்போது பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியை மனோன்மணியிடம் கேட்டேபோது, ''பல ஆண்டுக்கு முன், இப்பள்ளி கட்டியபோது இடப்பற்றாக்குறை இருந்ததால், அவரது சொந்த நிலத்தை கொடுத்ததாக, அவரது உறவினர்கள் தெரிவித்து, சுதந்-திர தின விழாவின்போது, அவரது படத்தை வைக்க தெரிவித்துள்-ளனர். இதனால் அவரது படம் வைக்கப்பட்டது,'' என்றார்.