உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருத்த விழிப்புணர்வு

திருத்த விழிப்புணர்வு

மேட்டூர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் துவங்கியுள்ளது. இது குறித்து பொதுமக்கள், பயணிகளிடம் வருவாய் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். நேற்று மதியம் மேட்டூர் பஸ் ஸ்டாண்டில், பயணிகளிடம் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பிரசுரத்தை, வருவாய்துறை அலுவலர்கள் வழங்கினர்.தொடர்ந்து பஸ்சில் இருந்த பயணிகள், அப்பகுதி கடை உரிமையாளர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது. மேட்டூர் துணை தாசில்தார் செந்தில்குமார், ஆர்.ஐ., வெற்றிவேல், வி.ஏ.ஓ., பாக்யராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ