உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வசிஷ்ட நதியில் குதித்த தம்பதி

வசிஷ்ட நதியில் குதித்த தம்பதி

வாழப்பாடி, டிச. 2-வாழப்பாடி அடுத்த பேளூர் ஈஸ்வரன் கோவில் பின்புறம், சின்னமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராமன், 25. இவரது மனைவி மோகனா, 20. இவர்களுக்குள் நேற்று இரவு குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும், அப்பகுதியில் உள்ள வசிஷ்ட நதியில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதை அறிந்து, அங்கு விரைந்து வந்த, வாழப்பாடி தீயணைப்பு துறையினர், 11:40 முதல் தேடினர். அதில் அரை மணி நேரம் போராடி, மூழ்கியிருந்த ராமனை மீட்டு முதலுதவி அளித்தபோது, அவர் உயிருடன் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து மோகனாவை ஆற்றில் தேடும் பணியில், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை