மேலும் செய்திகள்
தாரமங்கலம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
04-Sep-2025
தாரமங்கலம், தாரமங்கலம், கே.ஆர்.தோப்பூர், காந்தி நகரை சேர்ந்த பி.இ., பட்டதாரி தினேஷ், 27. 'ஆட்டோ கன்சல்டிங்' தொழில் செய்கிறார். குமாரபாளைம், வளையக்காரனுாரை சேர்ந்தவர் கோபிகா, 24. பி.எஸ்சி., நர்சிங் படித்துவிட்டு, அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து கொண்டே, எம்.எஸ்சி., படிக்கிறார். இருவரும், 'இன்ஸ்டா' மூலம் பழகி காதலித்தனர். இந்நிலையில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த, 7ல் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு வீட்டு பெற்றோரை அழைத்து பேசிய பின், பெற்றொர் சமாதானம் அடையவில்லை. இதனால் காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.
04-Sep-2025