கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நீதிமன்ற நடவடிக்கை பாயும்
சேலம், டிச. 14-சேலம் மாவட்ட தரக்கட்டுப்பாடு வேளாண் உதவி இயக்குனர் கவுதமன் அறிக்கை:மாவட்டத்தில் உரம் விற்க, சில்லரை வணிகத்தில், 713 உரிமம், மொத்த விற்பனையில், 108 உரிமம் வழங்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட தரக்கட்டுப்பாடு பிரிவு அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. சட்டப்படி உரங்களை இருப்பு வைத்தல், உரிய விலையில் விற்பனை செய்தல் வேண்டும்.மத்திய அரசால் நிர்ணயித்துள்ள விலையை விட, உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் விதிமீறிய செயல். இருப்புகளை முறையாக பராமரித்தல் அவசியம். வினியோகம் செய்யப்படும் அனைத்து வகை உரங்களுக்கான விலை பட்டியலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆய்வு, சோதனையின் போது கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்நிறுவன உரிமம் உடனே ரத்து செய்யப்படுவதோடு, நீதிமன்றம் மூலம் மேல் நடவடிக்கை தொடரும்.