உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் துரைசாமி பளிச்

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் துரைசாமி பளிச்

ஆத்துார்: ''ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் உயர்நீதிமன்றம், உச்சநீ-திமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்தாலும் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் துரைசாமி தெரிவித்தார்.சேலம் மாவட்டம் ஆத்துார், தலைவாசல் பகுதிகளில், பா.ஜ., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற, அக்கட்சி மாநில துணைத்த-லைவர் துரைசாமி, ஆத்துாரில் நிருபர்களிடம் கூறியதாவது: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' விவகாரத்தில் தமிழக, கேரள முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்ப-டுத்த, மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உயர்நீதிமன்றம், உச்-சநீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்தாலும் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது. 10 ஆண்டு பணிபு-ரிந்தாலும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் திட்டம், பா.ஜ., தான் கொண்டு வந்தது. அத்திட்டத்தை நிறுத்தி-யது, காங்., முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் தான்.சீனா, இந்-தியாவுக்குள் நுழைவதற்கு கடலில் கப்பல் நிறுத்தி வைத்துள்ளது. இந்திய நாட்டின் பாதுகாப்பை வலிமைப்படுத்தவே, குலசேகர-பட்டணத்தில் பல ஆயிரம் கோடி ரூபாயில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. தலைவாசல் கால்நடை பூங்காவில், 'சிப்காட்' தொழிற்சாலை அமைத்தால், பா.ஜ., மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தும். இவ்வாறு கூறினார். சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ