உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நெல்லுக்கு பயிர் காப்பீடு; விவசாயிகளுக்கு அழைப்பு

நெல்லுக்கு பயிர் காப்பீடு; விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம்: நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்துகொள்ள, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை:சேலம் மாவட்டத்தில் ராபி, 2024ம் ஆண்டு பருவத்தில், நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வரும், 30 முடிய, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ள காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தொடர்ந்து பெய்வதால், மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நெல் சாகுபடி செய்துள்ளவர்கள், பயிரை காப்பீடு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் பயிர் கடன் பெறாத விவசாயிகள், காப்பீடு பிரிமீய தொகையாக நெல் ஒரு ஏக்கருக்கு, 550 ரூபாயை பொது சேவை மையங்களில் செலுத்தி திட்டத்தில் சேர்ந்திடலாம். கடன் பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் சேரலாம். கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவசாயிகளே மொபைல் போனில், 'பி.எம்.எப்.பி.ஓய்., போர்டல்' மூலம் நேரடியாக ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை