உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தடுப்புச்சுவர் சரிந்ததால் உருவான குகை அந்தரத்தில் தொங்கும் சாலையால் ஆபத்து

தடுப்புச்சுவர் சரிந்ததால் உருவான குகை அந்தரத்தில் தொங்கும் சாலையால் ஆபத்து

ஏற்காடு, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சில நாட்களாக இரவில் கனமழை, பகலில் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை, 5:00 மணிக்கு மலைப்பாதையின், 9வது கொண்டை ஊசி வளைவில், சாலையோர தடுப்புச்சுவரின் கீழ் பக்கவாட்டில், கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த சுவர், 15 அடி நீளம் சரிந்து விழுந்தது. இதனால் அச்சாலையின் கீழ், 7 அடிக்கு குகை போன்று பள்ளம் ஏற்பட்டது.அப்போது அப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த, போக்குவரத்து துறை பணியாளர்கள், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும்படி, சாலை ஓரம் வாகனங்கள் செல்லாதபடி கற்களை வைத்துள்ளனர். இதை அறிந்து ஏற்காடு நெடுஞ்சாலை துறையினர் வந்து, தடுப்பு சுவர் சரிந்த இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து சாலையில் பாதி அளவுக்கு கற்களை வைத்து, சாலை ஓரம் வாகனங்கள் செல்லாதபடி, எச்சரிக்கை கயிறுகளை கட்டினர்.ஆனால் ஏற்காட்டில் கோடை விழாவுக்கு இயக்கப்படும் பஸ்கள் பெரிய அளவில் இருப்பதால், சரிவு ஏற்பட்ட கொண்டை ஊசி வளைவில் செல்ல முடியாமல், அங்கு நிறுத்தி சிறிது துாரம் பின்னோக்கி இயக்கி, மெதுவாக திருப்பி கடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதால், அந்த இடத்தை நெடுஞ்சாலை துறையினர் விரைவில் சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ