ஜன., 21ல் கள் இறக்கி சந்தைப்படுத்த முடிவு
சேலம்: சேலத்தில், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி அளித்த பேட்டி:'கள்' தடைக்கு எதிராக, 21 ஆண்டாக போராடி வருகிறோம். தமிழகத்தில் நடப்பாண்டு டாஸ்மாக் மூலம், 56,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதே அளவு பணம், இதர வழிகளில் மது ஆலை முதலாளிகளுக்கும், அவர்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கும், தேர்தலுக்கும் செலவிடப்படுவதால், 'கள்'ளுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுப்பதில்லை. 2027 ஜன., 21ல் தமிழகம் முழுதும் கள் இறக்கி சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.