உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கெட்டுப்போன பப்ஸ் தியேட்டர் கேன்டீனுக்கு சீல்

கெட்டுப்போன பப்ஸ் தியேட்டர் கேன்டீனுக்கு சீல்

ஆத்துார்: ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரே கட்டடத்தில் இரு சினிமா தியேட்டர்கள் உள்ளன. அதில் ஒரு தியேட்டரில் உள்ள கேன்டீனில் நேற்று இரவு, 7:30 மணிக்கு ஆத்துாரை சேர்ந்த வக்கீல் ஜெயக்குமார் உள்ளிட்டோர், 'பப்ஸ், சிப்ஸ்' வாங்கினர். அதில், 'பப்ஸ்' கெட்டுப்போன நிலையில் இருந்ததால், உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.அங்கு வந்து உணவு பாதுகாப்பு ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள், ஆய்வு செய்தனர். அப்போது கேன்டீனில் தரமற்ற பொருட்களான, 7 'பப்ஸ்', 58 பாக்கெட், 'சிப்ஸ்' ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கேன்டீனுக்கு, 'சீல்' வைத்து, அதன் உரிமையாளர் குணசேகரனுக்கு, 'நோட்டீஸ்' வழங்கினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ