உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சீலநாயக்கன்பட்டியில் நெரிசல் சாலையை அகலப்படுத்த கோரிக்கை

சீலநாயக்கன்பட்டியில் நெரிசல் சாலையை அகலப்படுத்த கோரிக்கை

பனமரத்துப்பட்டி, சேலம், சீலநாயக்கன்பட்டி பைபாஸில், 8 சாலைகள் ஒன்று சேருவதால் தினமும் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல நேரங்களில், நாமக்கல் - சேலம் சாலையில், 3 கி.மீ., வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், மக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனிடையே ஆம்புலன்ஸ் சிக்கிக்கொள்வதும் நடக்கிறது.சீலநாயக்கன்பட்டிக்கு, 3 கி.மீ., முன், நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து நாழிக்கல்பட்டி, பூலாவரி வழியே, பெரிய பாலம் என்ற இடத்தில் கோவை நெடுஞ்சாலையில் இணையும் மாவட்ட சாலை உள்ளது. நாழிக்கல்பட்டி - பூலாவரி சாலையை அகலப்படுத்தினால், அதன் வழியே நாமக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், கோவை, பெங்களூரு நெடுஞ்சாலையை அடைய முடியும். சீலநாயக்கன்பட்டி பைபாஸ் செல்ல வேண்டியதில்லை.அதேபோல் கோவை, பெங்களூரு சாலையில் வரும் வாகனங்கள், சீலநாயக்கன்பட்டி செல்லாமல் நாமக்கல், திருச்சி, மதுரை நெடுஞ்சாலைக்கு எளிதில் வந்தடையலாம். இதனால் சீலநாயக்கன்பட்டி பைபாஸில் போக்குவரத்து குறைய வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை