உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 119 கடைகள், 24 வீடுகள் இடிக்கும் பணி தொடக்கம்

119 கடைகள், 24 வீடுகள் இடிக்கும் பணி தொடக்கம்

வாழப்பாடி, டிச. 19-வாழப்பாடி, பேளூர் டவுன் பஞ்சாயத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால், நெடுஞ்சாலையை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் முதல் கருமந்துறை பிரிவு சாலை வரை, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட உள்ளதாக, வீடுகள், கடைகளுக்கு, ஒரு மாதத்துக்கு முன், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டிருந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு, நெடுஞ்சாலை, வருவாய், போலீஸ், நகர்புற வளர்ச்சி, தீயணைப்பு, மின் வாரிய துறை அதிகாரிகள் முன்னிலையில், சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 119 கடைகள், 24 வீடுகள் ஆகியவை, பொக்லைன் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது. இதில் சில வீடுகள், கடைகள் முழுதும் இடிக்கப்பட்டன. அதேபோல் சிறு கடைகளும் அகற்றப்பட்டன. இன்று ஆக்கிரமிப்பு முழுதும் அகற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை