உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கல்வி கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கல்வி கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆத்துார்:காங்., கட்சியின், சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமை வகித்தார். அப்போது மத்திய அரசின் கல்வி கொள்கை மற்றும் தேர்வு முகமை குளறுபடிகளால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என கூறி, மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.ஆத்துார் நகர தலைவர் முருகேசன், ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் வட்டார, நகர, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து ஆத்துார் நகர அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. அதில் வரும், 15ல், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளில் நலத்திட்ட உதவி வழங்குதல்; வரும், 11ல் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் சேலம் வரும்போது வரவேற்பு அளித்தல் என்பன உள்பட, 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை