மேலும் செய்திகள்
என்.எல்.சி.,யில் போனஸ் கேட்டு உண்ணாவிரதம்
04-Oct-2024
வீரபாண்டி: தொழிலாளர் விரோத போனஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி, உருக்காலையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, 'செயில்' நிர்வாகத்தில் சேலம் உருக்காலை செயல்படுகிறது. அதன் தொழிலாளர்களுக்கு விரோத முறையிலான போனஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி நேற்று ஆலை நுழைவாயில் முன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதில் ஆலை சி.ஐ.டி.யு., தொழிற்சங்க பொதுச்செயலர் சுரேஷ்குமார் பேசியதாவது:தற்போது போடப்பட்டுள்ள போனஸ் ஒப்பந்தம், தொழிலாளர்களுக்கு விரோதமாக உள்ளது. அதை ரத்து செய்து விட்டு நியாய முறையில் போனஸ் வழங்க வேண்டும். 8 ஆண்டுகளாக நடந்து வரும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவாக இறுதி செய்ய வேண்டும். 39 மாத, 'அரியர்' தொகையையும் வழங்க வேண்டும். எஸ்.6 மற்றும் எஸ்.3க்கு வழங்கப்படும் வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட சலுகைகளை, எஸ்.3 மற்றும் எஸ்.1 தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின், 'அரியர்' தொகை, சம்பள பிடித்தம் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். கோரிக்கைகளை உருக்காலை நிர்வாகம் நிறைவேற்றாவிட்டால், அக்., 14, 15ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.தொ.மு.ச., செயலர் பெருமாள், ஐ.என்.டி.யு.சி., தலைவர் தேவராஜன், பி.எம்.எஸ்., தலைவர் வீரமணி, எல்.எல்.எப்., செயலர் ரவீந்திரன் உள்பட, ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
04-Oct-2024