உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பி.டி.ஓ., மீது நடவடிக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பி.டி.ஓ., மீது நடவடிக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம்: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த, 10ல் அமைச்சர்கள் நடத்திய ஆய்வு கூட்டத்தில் சரிவர பதில் அளிக்கவில்லை என, திருப்பத்துார் பி.டி.ஓ., சோமதாஸ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதேபோல் மதுரையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், செல்லம்பட்டி பி.டி.ஓ., கீதா இடமாற்றப்பட்டார். இருவர் மீதான நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று, மாநிலம் முழுதும் உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதன்படி சேலம் ஒன்றியத்தில் மாவட்ட பொருளாளர் வடிவேல் தலைமையில் அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் காடையாம்பட்டி ஒன்றியத்தில் மாவட்ட செயலர் ஜான், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் முன் மாநில துணைத்தலைவர் திருவேரங்கன் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !