100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
இடைப்பாடி: மேட்டூர் அணை நிரம்பி வெளியேறும் உபரிநீரை, சேலம் மாவட்-டத்தில் உள்ள, 100 ஏரிகளுக்கு கொண்டு சென்று நிரப்பும் திட்-டத்தை முன்னாள் முதல்வர், இ.பி.எஸ்., தொடங்கி வைத்தார். ஆட்சி மாற்றத்துக்கு பின் அத்திட்டத்தை கிடப்பில் போடப்பட்ட-தாக புகார் எழுந்தது. இதனால் அத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி, கொங்கணாபுரம் அருகே கச்சுப்பள்ளி ஏரியில் நேற்று, காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு தலைவர் வேலன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது வேலன் பேசுகையில், ''காவிரி உபரிநீர் திட்டத்தில் உள்ள கச்சுப்பள்ளி ஏரியை இணைக்கும் கால்வாய் பணி முழுமை அடையவில்லை. இதனால் அதிலிருந்து தண்ணீர் செல்லும் பல ஏரிகளுக்கு காவிரி உபரிநீர் கொண்டு செல்ல முடி-யாத நிலை உள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உபரிநீர் கால்வாய், குழாய் பதிக்கும் பணிகளை முடிக்க வேண்டும்,'' என்றார்.